தோள்பட்டை வலி நீங்கிட – Dr .Bhat’s NCMT செயன்முறை ஓர் உபாயம்

Frozen Shoulder எனும் வியாதியினை Adhesive Capsulitis என்றும் அழைப்பர். தோள்பட்டையில் வலி தோன்றி அதன் கட்டுப்படுத்துவதே இந்நோயின் முதற்கூறு ஆகும். தோள் பட்டை சார்ந்த இடத்தில் இருக்கும் Glenohumeral எனும் சிறுமூட்டு பகுதியினை தாங்கும் கன்னெக்ட்டிவ் டிஸ்யூ எனும் இணைப்பு திசுவில் ஏற்படும் வீக்கத்தினால் தோள்பட்டையில் வீக்கமும், விறைப்பும் ஏற்படுகின்றது. இந்நோய்க்கான முதற்காரணியை இன்றளவும் நவீன மருத்துவ துறையினரால், அறுதியாக கூற இயலவில்லை. ஒய்வு அல்லது சம நிலையில் வலி அதிகரிப்பதும், குறைந்தும்; சிறிதளவு மூட்டின் இயக்கித்தினால் குறைவதும் இந்நோயின் இயல்பு.

Frozen Shoulder-ல் சில சமயம் ஸைனோவியல் ஃலூயிட் எனும் மூட்டு நீர்மம் குறைவதனால் அவ்விடத்தில் அழுத்தம் ஏற்பட்டு, தோள்பட்டையின் ஆர்.ஓ.எம் எனும் இயல்பான நகர்வு இயக்கத்தினை கட்டுப்படுத்துகின்றது. சில மக்களில் மூட்டு நீர்மம் திண்மையாகி Shoulder capsule எனும் தோள்பட்டை பொதியுறையுள், வடு போன்ற adhesions எனும் ஒட்டிழை திசுவினை உண்டாக்கியும் தோளினை விரைப்பாக்கி “ஆர்.ஓ.எம்” – ஐ கட்டுப்படுத்திவிடுகின்றது.shoulder jt_img_20161212_101614.jpg

எமது வைத்தியர் மரு . அ .ரங்கபிரசாத் பட், கிளினிக்கல் பரிசோதனையின் மூலம் அம்ஸ சந்தி மர்மம் மற்றும் அதன் சார்ந்த இணை பகுதிகளில் அலைன்மெண்ட் எனும் இசைவாக்கத்தினை உணர்ந்து, தடவல், அடங்கல், அமர்தல் போன்றவற்றினால் வலியினை குறைப்பது வழக்கம்.

அது மேற்பட்டு, பிணியாளருக்கு தரப்பட்ட வலி நிவாரண அனுபாவத்தினை தக்க வைத்து, க்யூ.ஓ.எல் (Q .O .L) எனும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட NCMT செயன்முறையின் மூலம் அம்ஸ சந்தி மற்றும் அது சார்ந்த மர்மங்களையும் சப்போர்ட் தந்து மேம்படுத்தி வலி மீண்டும் மிகா வண்ணம் செயல்பாடும் செய்யப்படுகின்றது.

Continue reading “தோள்பட்டை வலி நீங்கிட – Dr .Bhat’s NCMT செயன்முறை ஓர் உபாயம்”

Advertisements