தோள்பட்டை வலி நீங்கிட – Dr .Bhat’s NCMT செயன்முறை ஓர் உபாயம்

Frozen Shoulder எனும் வியாதியினை Adhesive Capsulitis என்றும் அழைப்பர். தோள்பட்டையில் வலி தோன்றி அதன் கட்டுப்படுத்துவதே இந்நோயின் முதற்கூறு ஆகும். தோள் பட்டை சார்ந்த இடத்தில் இருக்கும் Glenohumeral எனும் சிறுமூட்டு பகுதியினை தாங்கும் கன்னெக்ட்டிவ் டிஸ்யூ எனும் இணைப்பு திசுவில் ஏற்படும் வீக்கத்தினால் தோள்பட்டையில் வீக்கமும், விறைப்பும் ஏற்படுகின்றது. இந்நோய்க்கான முதற்காரணியை இன்றளவும் நவீன மருத்துவ துறையினரால், அறுதியாக கூற இயலவில்லை. ஒய்வு அல்லது சம நிலையில் வலி அதிகரிப்பதும், குறைந்தும்; சிறிதளவு மூட்டின் இயக்கித்தினால் குறைவதும் இந்நோயின் இயல்பு.

Frozen Shoulder-ல் சில சமயம் ஸைனோவியல் ஃலூயிட் எனும் மூட்டு நீர்மம் குறைவதனால் அவ்விடத்தில் அழுத்தம் ஏற்பட்டு, தோள்பட்டையின் ஆர்.ஓ.எம் எனும் இயல்பான நகர்வு இயக்கத்தினை கட்டுப்படுத்துகின்றது. சில மக்களில் மூட்டு நீர்மம் திண்மையாகி Shoulder capsule எனும் தோள்பட்டை பொதியுறையுள், வடு போன்ற adhesions எனும் ஒட்டிழை திசுவினை உண்டாக்கியும் தோளினை விரைப்பாக்கி “ஆர்.ஓ.எம்” – ஐ கட்டுப்படுத்திவிடுகின்றது.shoulder jt_img_20161212_101614.jpg

எமது வைத்தியர் மரு . அ .ரங்கபிரசாத் பட், கிளினிக்கல் பரிசோதனையின் மூலம் அம்ஸ சந்தி மர்மம் மற்றும் அதன் சார்ந்த இணை பகுதிகளில் அலைன்மெண்ட் எனும் இசைவாக்கத்தினை உணர்ந்து, தடவல், அடங்கல், அமர்தல் போன்றவற்றினால் வலியினை குறைப்பது வழக்கம்.

அது மேற்பட்டு, பிணியாளருக்கு தரப்பட்ட வலி நிவாரண அனுபாவத்தினை தக்க வைத்து, க்யூ.ஓ.எல் (Q .O .L) எனும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட NCMT செயன்முறையின் மூலம் அம்ஸ சந்தி மற்றும் அது சார்ந்த மர்மங்களையும் சப்போர்ட் தந்து மேம்படுத்தி வலி மீண்டும் மிகா வண்ணம் செயல்பாடும் செய்யப்படுகின்றது.

எமது வைத்தியர் மரு.ரங்கபிரசாத் பட் அவர்களின் NCMT செயன்முறை கொண்டு பயன் பெற்றோர் அதி தீவிர வேதனையோடும் வலியோடும் வந்த தங்களுக்கு, அதி வேகத்தில் முதற் சிகிச்சை அமர்விலேயே வலி குறைந்து உணர்வதாக தெரிவிக்கின்றனர்.

வலியினை குறைத்த பின், ஆரோக்கியம் நாடுவோருக்கு (பிணியாளர் எனும் எதிர்மறை சொல்லை தவிர்க்கவே ஆரோக்கியம் நாடுவோர் எனும் பதத்தினை உபயோகப்படுத்தியுள்ளோம்) கிடைக்கப்பெற்ற ஆரோக்கியமான வலியில்லா சூழலை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் சில குறிப்பிட்ட வகையிலான தேஹ நீட்டல் பயிற்சி கற்று தரப்படுகின்றது.

நமது வைத்தியரின் அவுட் பேஷண்ட் சார்ந்த ஆவணங்களில் பதியப்பெற்ற 80 ஆரோக்கியம் நாடியவரின், தகவல்கள் அடிப்படையில் இருந்து கிடைக்கப்பெற்ற, புள்ளியியல் விவரங்களை ரேண்டம் அனாலிசிஸ் ஸ்டடீஸ் (சமவாய்ப்பு மாறி ஆய்வு )  அட்டவணைகள் மூலம் கீழே பதிவிடுகின்றோம்.

80 ஆரோக்கிய நாடியோரின் வயது பிரிவு சார்பு  ஆய்வு தகவல்:

img_20161223_220635.jpg

NCMT செயன்முறைக்கு  – முன்னும் பின்னுமான இயல்பான நகர்வு எல்லை (ஆர்.ஓ.எம்) குறித்த ஒப்பிட்டு அட்டவணை:
img_20161223_215501.jpg
NCMT செயன்முறை ஆய்வில் பங்கு கொண்டவர்களின் டெமோகிராபிக் டேட்டா:

img_20161223_220239.jpg

மேற்படி ஃப்ரோஸன் ஷோல்டர் சார்ந்த  NCMT (நாந் கன்வெந்ஷனல்  மர்மா டேப்பிங் ) செயன்முறை (Procedure) ஆய்வில் பாதிக்கப்பட்டிருந்த மர்மங்களின் தாக்கத்தின்  தணிக்கை:

img_20161223_220513.jpg


Disclaimer:- NCMT  செயன்முறையின் மூலம் கிடைக்கப்பெறும் வலி நிவாரணம் மற்றும் அதன் வீரிய விகிதம், நோயுற்ற நபரின் தேஹ பிரக்ருதி, விக்ருதி,தோஷம், தேஷம்,காலம்,வயஸ்,சத்வம்,சாத்ம்யம், நாடி போன்ற விடயங்களுக்கு ஏற்ப மாறுபடும். வைத்தியரை அணுகி குணம் பெறுவது சாலச் சிறந்தது.

மேற்படி ரேண்டம் அனாலிசிஸ் ஸ்டடீஸ் (சமவாய்ப்பு மாறி ஆய்வு)-ன் சில பகுதிகள் மட்டுமே, பொது விழிப்புணர்விற்காக எமது வலைபதிவில் பதிவிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s